My Message

அறம் செய்ய விரும்பு!

Note: Would be starting to share my works again soon!

Pages

Sunday, July 3, 2011

மேகத்துள் ஒளிந்த நிலவு- Feel of the lost love..

நிலவே..
மேகத்துள் ஒளிந்து கொண்ட நிலவே..

பௌர்ணமி ஒரு தினம் நான் பார்க்க
துடிக்கிறேன் என்று..

நித்தம் மேகத்துள் ஒளிதல் தகுமோ??

உன் கரைகளுக்காக வருந்தும் உனக்கு..
மீதம் முழுதும் வெளிச்சம் என தெரியவில்லையா??

அவ்வெளிச்சம் இன்றி என்
வாழ்வில்லை என புரியவில்லையா??

ஒளிதல் எனக்கு மட்டும் தானா??

மேகம் என்மேல் மட்டும் தானா??

நிலவே சீக்கிரம் வெளியே வந்துவிடு..

'உன் ஒளியில் எழுதும்
என் கவிதை
பாதியில் நிற்கிறது'!!


-கார்த்திக் செல்வா..