அன்பின்றி..
சுட்டாலும் சூரியனை சுற்றுமா பூமி?
விட்டாலும் நம்மை வீரட்டுமா காற்று?
அன்பின்றி..
உறவோடு இருந்து அறவோடு வெட்டினாலும்
நமை பார்த்து சிரிக்குமா ரோஜா??
தன் பாதையில் விரட்டி சென்றாலும்
கதிரவன் கரைந்ததும் சுருங்குமா தாமரை??
அன்பின்றி..
கொட்டினாலும் ஓட்டினாலும் மார்கழி வந்ததும்
துள்ளலோடு நமை ஆரவணைக்குமா மேகம்??
'போ'என்று வசைபாடி அனுப்பினாலும் இசைபாடி
கரையை தொட்டுத்தொட்டு பார்க்குமா கடல்??
அன்பின்றி..
நெல் உதிர்ந்ததும் உயிர்விடுமா கதிர்??
தோற்றாலும் நம்மை தொடருமா நட்பு??
கோபத்தோடு குடைபிடித்தாலும் முத்தம்இடுமா மழை??
அன்பே..
அன்பின்றி..
நீ மறைத்தாலும் மறையுமா உன் நாணம்??
கோடி வாசங்களில் உன்வாசம் முகரமட்டும்
சுவாசிக்குமா இந்த உயிர்??
:) கார்த்திக் செல்வா :)