here r some of the short kavidhais of mine..
1. தமிழர்கள் சுற்றதிலே!
தமிழோ தெருமுற்றத்திலே!!
2.கவிதை ஒன்று மலர்ந்தது..
படித்தோர் முகமும் மலர்ந்தது..ஏதோ சாதித்ததாய் மகிழ்ச்சி!!!
3.சுதந்திர தினம்
வெள்ளைக்காரர்கள் வசமிருந்து இந்தியாவை
கொள்ளைக்காரர்கள் கைப்பற்றிய தினம்
இன்று!!!
4. B.Tech
நாளை படிக்கலாம் என்று
நகரும் நான்கு வருடம் !!
5. நட்பே..
என் கண்ணீருக்கு உன் மேல்
மிக கொடிய கோபம்..
வெகுநாட்களாய் அதற்கு
தரையை முத்தமிட ஆசை!!
6. மலரட்டும் ஒரு உலகம்..
முதலாளியும் உழைத்து..
தொழிலாளியும் தழைத்து!!!
7. நீ செல்லும் பாதையில்..
காலையில் உன் முகத்தில் அடிக்கும்..
சூரியன் கூட..
மாலையில் உன் பின்னால் தட்டி கொடுக்கிறது!!!
பொறுத்திரு..
உலகம் மாறும்!!!
8. நிலவு..
அனுதினம் நீரில் உன் பிம்பம் தெரிய..
உன்னில் நீரைத் தேடி பல்லாயிரம் கோடி!!!
தினம் பார்க்கிறேன் உனை பயத்தோடு..
ஆனால் நிம்மதி..
வெள்ளைகள் நிறம் மாறுவது உலகில் இயற்கை!!!
- :) கார்த்திக் செல்வா :) -
4, 5, 6, 7 \m/
ReplyDeleteNice da! I see you've changed your layout! Blog looks really nice now! :)
ReplyDelete