My Message

அறம் செய்ய விரும்பு!

Note: Would be starting to share my works again soon!

Pages

Wednesday, April 6, 2011

நண்பனே..--- Nanbane..

This is the lyrics of NIT-T music troupes' own composition 'nanbane'.. which is about friendship..

 நண்பன் ஒருவன் இருந்தாலே...
நரகத்தில் கூட தங்கலாம்..
எதிரே எமனே வந்தாலும்..
ஒரு கைபார்த்து செல்லலாம்..

கவலைகள் ஆயிரம் இருந்தாலும்..
கனவுகள் காக்கிறாய்..
சண்டையிட்டு கோபம்கொண்டு சென்றாலும்..
புன்னகை சேர்க்கிறாய்..
கண்ணைகட்டி காட்டில் விட்டு சென்றாலும்..
பயமில்லை நீ இருந்தா..

அங்கிருந்தும் இங்கிருந்தும் வந்தாலும்..
என்றென்றும்..
வேதம் இல்லை.. பேதம் இல்லை.. ஏதும் இல்லை..

உயிரும் நீ.. உணர்வும் நீ...
உடல் எரியும் வரை..
உலகம் நீ..

கோடி வலிகள் சுட்ட போதிலும்..
தேடி வந்து கட்டி கொள்கிறாய்..
காதல் கூட சொல்லாதது..
கணத்தில் நீ சொல்கிறாய்..

என்ன தவம் செய்தேனோ??
நட்பாக கிடைத்தாய்..
என்ன தான் நான் செய்தேனோ??
உயிரையும் நீ கொடுத்தாய்..

எல்லாமே விட்டு வா..
இசையில் பேசலாம்..

உயிரும் நீ.. உணர்வும் நீ..
உடல் எரியும் வரை உலகம் நீ..



------- கார்த்திக் செல்வா,, நகுலன் ,, சர்வேஷ் கீர்த்தி,,..---------

No comments:

Post a Comment