கண்முன் பறக்கும் வானவில் நீயோ??
காற்றில் மிதக்கும் சித்திரம் நீயோ??
பிரம்மன் போட்ட மார்கழி கோலமா??
வானம் செல்லும் சின்ன மின்னலா??
நொடியில் சுருங்கிய நீல வானமா??
படியில் சிதறும் நவரத்ன மாலையா??
அறியா காட்டின் புரியா வழியாய்..
விட்டதும் துள்ளிடும் அழகிய முயலாய்..
மனதின் ஓட்டமாய்.. மனிதனின் ஆட்டமாய்.
நிமிடத்தில் பிரியும் நிலையில்லா உயிராய்..
தொடும் முன் தொடுவானமே சென்றது..
எட்டாத பட்டாம்பூச்சி..
************கார்த்திக் செல்வா****************
No comments:
Post a Comment