காலம் கண்ட காகிதம் காத்த
காவியக் காதல் பார்த்த பாரதத்தில்
இன்றோ...
கண் கதை சொல்லும் வேளை
கண்ணால் பார்க்காத கணினிக் காதல்!!
கனவுகள் செத்து கவலைகள் கொண்டு
கண்ணியம் இல்லா கன்னிக் காதல் !!
மெய் பார்க்கும் பொய்க் காதல்!!
cafeஇல் பூக்கும் costly காதல்!!
கர்வம் கொண்ட கௌரவக் காதல்!!
'கால்'களில் வாழும் கைப்பேசிக் காதல்!!
தீர்கம் இல்ல திடீர் காதல்!!
நேற்று இன்று நாளை என்று
நிலைத்து நிற்கும் தினமொரு காதல்!!
பட்டம் பெற்றத்தொடு பட்டமாக பறந்துவிடும்
தெளிவில் பிறந்த தெய்வீகக் காதல்!!
கிடைத்தால் போதும்! கனவே போதும்!
நானும் காதலிக்கிறேன்!! கடமைக் காதல்!!
வெயில் சுட்டாலும் மழை தொட்டலும்
கடற்கரை மணலில் கவலையில்லா காதல்!!
இன்று இந்த காதல்கள் மணக்கின்றன !!
'''''' இந்த காதலர்கள் மணப்பதில்லை!!!!!!''''''
:) ~கார்த்திக் செல்வா~ :)
DEI!! Thaaru maara irukku da! :)
ReplyDeletemachi scene da....ithea mathiri innum anuppu da...ena mathri pasangaluku romba helpa irukkum...
ReplyDeletesujith sorry for a so late reply.. back bloggin 4m nw on.. sure machi :) thanx
ReplyDelete